பக்கம் பக்கமாக என்னைப் பற்றி சுயசரிதை வடிக்கும் அளவிற்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரிய மனிதனில்லை. நானும் உங்களில் ஒருவனைப் போல ஒரு சராசரியான மனிதன்தான். கணிப்பொறிப் பயன்பாட்டியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். தற்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய அப்பா, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, எனக்கு சிறு வயது முதலே தமிழின் மீது அளவு கடந்த அன்பும், பற்றும், மரியாதையும் உண்டு. எனது உணர்வுகளையும், உள்ளத்தின் ஓட்டங்களையும் தமிழ் மக்களிடையே பகிர்ந்துகொள்ள ஒரு வடிகால் தேவைப்பட்ட காரணத்தினால், எழுத ஆரம்பித்த முயற்சிதான், தமிழில் சிறுகதை. அந்தப் பயணம் இன்றளவும் இனிமையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மென்மேலும் அது சிறப்புறத் தொடர, இணையதள ரசிகர்களாகிய தங்களின் ஊக்கத்தையும், வாழ்த்துக்களையும் அன்புடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றேன்.